Latest News

May 13, 2016

பிரித்தானிய தமிழர் பேரவையினரால் இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கண்டனப் பேரணி
by admin - 0

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் லண்டன் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு நாட்களாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டதுநேற்றைய தினம் (12/05/2016) காலை மணி முதல் மாலை 4மனி வரை இரண்டாவது நாளாக மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணியில் லண்டனின் பல பாகங்களிலும் இருந்து பெரும் திரளாக தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட  ஊழலுக்கு எதிராக நடைபெற்ற இம் மாநாட்டில் ஆரப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் மூலம் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் எதுவும் நடந்து விடவில்லை என்பதும்,2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் தமிழர் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமானவர்களில் இலங்கை அதிபராக இருக்கிற மைத்திரிபால சிறிசேனாவும் ஒருவர் என்பதும் உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது பிரித்தானிய தமிழர் பேரவை.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளின்பிரகாரம் பயங்கரவாத தடை சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும், தமிழ் மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படல் வேண்டும், வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் மற்றும் சரவதேச சட்டவல்லுனர்களின் பங்களிப்புடன் இனப்படுகொலைக்கான நீதி விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

இலங்கையின் புதிய அரசாங்கம் ஓர் நல்லாட்சி அரசாங்கம் என சர்வதேச சமூகத்தை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் இத் தருணத்தில்தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட இவ் கண்டனப் பேரணி இலங்கை அரசுக்கு உலக அரங்கில் பெரும் நெருக்கடிகளையும்இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளையும் வெளி உலகிற்கு தெளிவுபடுத்தியிருக்கின்றது.

 

 

பிரித்தானிய தமிழர் பேரவையினரால்  எம் மக்களின் விடிவு நோக்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான அரசியல்  செயர்ப்பாடுகளுக்கு புலம் பெயர் வாழ் எம் உறவுகளின் ஆதரவினை பிரித்தானிய தமிழர் பேரவை தொடர்ச்சியாக வேண்டி நிற்கின்றது. இதே போன்று  எதிர் வரும் 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செயப்பட்டுள்ள 7ம் ஆண்டு  முள்ளி வாய்க்கால் நினைவு தினத்திலும் பெரும் திரளாக உறவுகள் கலந்து கொண்டு எம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி குரல் கொடுக்க ஒன்று சேருமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் வேண்டிக்கொள்கின்றது.

« PREV
NEXT »

No comments