Latest News

May 13, 2016

டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை
by admin - 0

டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும்இ மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு 11.05.2016 சனிக்கிழமை முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது.

சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக சர்வதேச சட்டங்களும் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல் என்ற தலைப்பில் விவகாரம் பேசப்பட்டது.

போர் முடிந்ததாகக் கூறப்பட்டாலும் கடந்த ஏழாண்டு காலமாக மாற்றமின்றி தொடரும் அவலங்களுக்கு சர்வதேச சமுதாயம் எடுக்கும் தார்மீகப் பொறுப்புத்தான் என்ன.. இதுகுறித்த சர்வதேச அறிஞர், அரசியல் தலைவர்கள் கருத்துப்பகிர்ந்து கவனயீர்ப்பை ஏற்படுத்தும் மாநாடாக இம் மாநாடு அமைந்தது.

இந்த மாநாட்டில் டேனிஸ் பாராளுமன்றத்தின் முக்கிய உறுப்பினர்களான மிச்சேல் அஸ்ரப் ஜென்சன், நிக்கொலாய் விலும்சன், மோண்ஸ் ஜென்சன், கிறிஸ்டியான் யூல் ஆகிய தலைவர்களும், தாயகத்தில் இருந்து முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் சிவில் சமூக அமையத்தின் சார்பாக கத்தோலிக்கப் பாதிரியார் எழில் ராஜன், உலகப்புகழ் பெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர் பிரான்சிஸ் ஹர்ரிசன், குர்டிஸ்தான் போராட்ட அமைப்புப் பிரதிநிதி, டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் பொன் மகேஸ்வரன் ஆகியோர் முக்கிய உரைகளை வழங்கினார்கள்.

மேற்படி மாநாட்டில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments