தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லை என ஶ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள வார பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியதுடன் அவர் தெரிவித்துள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் தேசிய தலைவர் அவர்களுக்கு மரண அத்தாட்சி சான்றிதழை இன்னும் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மரண அத்தாட்சிப் பத்திரத்தை காட்டினால் மாத்திரமே தன்னால் பிரபாகரன் இறந்து போனார் என்பதை நம்ப முடியும் எனவும் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment