என் அன்பு நண்பர்களே, இரத்த சொந்தங்களே வணக்கம்.! ஈழத்து திரைப்படங்கள், குறும்படங்களை எடுப்பது, திரைக்கு கொண்டு வருவதும் கடினமாகவுள்ளது.
இதற்கு பல காரணங்களும் உண்டு. எமது பண்பாடு, கலை, கலாச்சாரத்திற்கு எதிரான படைப்புகளை தடை செய்பவர்கள், விமர்சனம் செய்பவர்கள், போர்க்கொடி காட்டுபவர்கள் ஏன் சரியான நேர்த்தியான வீரமான படைப்புகளை வளர்ப்பதற்கு அங்கீகரிப்பதற்கும் மறுக்கின்றனர்.
சிந்தித்துப் பாருங்கள். எமது படைப்புகள் ஆரோக்கியமாக வெளிவரும் எனில் நீண்ட காலமாக எம்மை சுரண்டி கொண்டிருக்கும் வியாபார படங்கள் கேள்விக்கு உள்ளாகும்.
இவற்றை எல்லாம் நான் தினமும் சிந்தித்து பார்த்தால் காரணங்கள் கண் முன்னே தெரிகின்றன. ஒரு ஈழத்து படைப்பாளி தன் படைப்பை உருவாக்குவதற்கும் திரையிடுவதற்கும், தடுமாறுகின்றான்.
காரணம் நமக்கான ஈழ இயக்குனர் சங்கம், நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தணிக்கை குழு என்பன ஒரு பொதுவான புலம்பெயர் நாட்டில் எமது மூத்த கலைகர்களின் நிர்வாகத்தின் கீழ் இல்லாமை உருவாக்கப்படாமை.
இதை நாம் எல்லாரும் சிந்தித்து செயல்படுவோம். எமது தனித்துவமான படைப்புகளுக்கு வேறுநாட்டில் ( தணிக்கை) அங்கீகாரம் வேண்டி நிற்கும் போது அவர்களின் மனிதநேயமில்லாத இரும்பு வார்த்தைகள் நம்மை தலைகுனிய வைக்கின்றன.
இது எல்லா ஈழத்து படைப்பாளிகளுக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். தமிழக சினிமாவோடு ஈழ சினிமாவை ஒன்றிணைந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பாதை வேறு, நமது பாதை வேறு. நமக்கான தனித்துவமான படைப்புகளை கலைஞர்களாகிய நாம் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு மக்களிடம் கொண்டு செல்வது தான் ஆரோக்கியமான விடயமாகும்.
ஈழத்து கலைஞர்களுக்காக என்னால் உருவாக்கப்பட்ட பகலவன் ஒளிப்பதிவுக் கூடத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
படைப்புகளின் நோக்கம் நாம் அறிந்தால் இலவசமாக செய்து கொடுப்போம்.194
வது நாடாக தெற்கு சூடானுக்கு பிறகு ஈழம் கிடைக்கும். அப்படி கிடைத்தால் அந்த மண்ணும் மனிதர்களும் எப்படி இருப்பார்கள் என்று கூறும் திரைக்காவியம் தான் ஈழத்திரைப்படமான கூட்டாளி இது முற்றிலும் தமிழீழத்தில் எடுத்த திரைப்படம் போல் இருக்கும் இதை நாம் தமிழகத்தில் உள்ள கிராமங்களில் உருவாக்கியுள்ளோம்.
சமீபத்தில் இத்திரைப்படம் புலம்பெயர்ந்த நாடுகளில் திரையிட இருப்பதால் உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டி நிற்க்கின்றேன்.
இயக்குனர்
நிரோஜன்
என்று குறிப்பிட்டுள்ளார்
1 comment
உண்மையான கலைஞனையும், கலையையும் என்றும் ஆதரிப்போம்.
Post a Comment