Latest News

May 28, 2016

வித்தியா கொலை வழக்கு பேராரியரசிர் தமிழ்மாறன் மற்றும் சி.உ பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க வெகுவிரைவில் கைது
by admin - 0

கடந்த ஒரு வருட காலத்திற்குள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட, புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற 17 வயது மாணவி சிவயோகநாதன் வித்தியாவின் மரணத்தின் முக்கிய சந்தேக நபரான மகாலிங்கம் சிவகுமார் என்ற 'சுவிஸ் குமார்' இக் கொலைகுற்றம் உதவுதல் மற்றும் உடந்தையாக இருந்தது, வீட்டில் தக்கவைத்து குற்றவாளிக்கு அடைக்களம் கொடுத்தது, வேண்டுமென்றே குற்றவாளி தப்பிச்செல்ல உதவி செய்தது போன்ற குற்றங்களின் கீழ் பல்கலைக்கழக சட்ட பீட பீடாதிபதி பேராசிரியர் வீ.டீ. தமிழ்மாறன் மற்றும் யாழ்ப்பான பிரதேச பொறுப்பான தற்பொழுது மட்டக்களப்பு பிரதேச பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜயசிங்க ஆகிய இருவரும் வெகுவிரைவில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தலைமை அலுவலகத்தினூடாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இக் கற்பழிப்பு மற்றும் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களும் தற்சமயம் சிறைக்கைதிகளாக உள்ளனர்.


இந்த தாக்குதலில் முக்கிய நபரான மகாலிங்கம் சிவகுமார் என்ற சுவிஸ் குமார் மட்டுமின்றி பூபாலசிங்கம் இந்திரகுமார்,பூபாலசிங்கம் ஜெயகுமார், மகாலிங்கம் சசிதரன் உட்பட மேலும் நான்கு பேருக்கு இக் கொலைக்குற்றம் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனையில் சுவிஸ்குமார் மற்றும் பேராசிரியர் தமிழ்மாறன் புங்குடுதீவு நகரில் நெருங்கியவர்களின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர் என தெரியவந்து;ள்ளது. நெருங்கியவர்களினூடாக பேராசிரியர் தமிழ்மாறன் தனது மாணவனான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிடம் எனது நண்பரான சுவிஸ் குமாரை காப்பாற்றி தாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். லலித் ஜயசிங்க தனது மாணவன் என பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்துரையாடலில் பேராசிரியர் தமிழ்மாறன் ஒப்புக்கொண்டுள்ளார்.


இந்த முழுமையான விசாரணையை முன்னெடுக்க பேராசிரியர் தமிழ்மாறன் கொழும்பிற்கு வருகை தந்த லலித் ஜயசிங்கவின் யாழ்ப்பான உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். அத்துடன் புங்குடுதீவு நகர மக்கள் உதவியுடன் சுவிஸ்குமாரை பிடித்து கட்டிய இடத்திற்கு உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் குழுவினர் தமிழ்மாறனின் வேண்டுகோளை நிராகரித்த லலித் ஜயசிங்க பிரதேசவாசிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சுவிஸ் குமாரை பிரதேச மக்களின் தடுப்பிலிருந்து காப்பாற்றி யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


அதன் காரணமாக உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய சந்தேக நபரான சுவிஸ்குமாரின் சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு ஒப்படைத்துள்ளனர். சிகிச்சை பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் பேராசிரியர் தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கமைய உதவி பொலிஸ்மா அதிபரின் ஊடாக சுவிஸ்குமார் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கிளிநொச்சி வரை இரகசியமாக சென்று பின்னர் கொழும்பிற்கு செல்வதற்கு உதவி செய்த விதத்தை இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


பின்னர் இந்த சம்பவம் அறிந்த புங்குடுதீவு மக்கள் பேராசிரியர் தமிழ்மாறன் றன் ஊரிற்கு வரும்வரைக்கும் அவர் மற்றும் அவரது புதல்வியை வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. இவ்வாறு தமிழ்மாறனின் ஊடாக உதவி பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததன் பின்பு அவர் ஆயுத பொலிஸ் குழுவினருடன் வருகை தந்த பேராசிரியர் மற்றும் அவரது புதல்வியினூடாக கொழும்பிற்கு அனுப்பிய சுவிஸ்குமார் உடனடியாக கைது செய்யுமாறு பிரதேசவாசிகளுக்கு எழுத்து மூலம் உறுதியளித்துள்ளார்.


பின்னர் கயிட்ஸ் பொலிஸாரின் தலைமையகத்தில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெள்ளவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சுவிஸ்குமார் உடனடியாக கைது செய்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சுவிஸ்குமார் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நாள் அன்று உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததோடு அவரை பார்ப்பத்தவுடன் கோபமடைந்த நீதவான் உடனடியாக தன்னை நீதிமன்றத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். அன்று நீதிபதியூடாக சுவிஸ்குமாரை சிறையில் தடுத்துவைப்பதோடு பொலிஸாரினால் வித்யா அணிந்திருந்த பாதணி மற்றும் அவரது தோடு இரண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அது மட்டுமின்றி இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபரும் சிறு பிள்ளையும் சாட்சியாளர்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


சுவிஸ் குமார் இதற்கு முன்பும் குற்றங்களில் சிக்கியுள்ளார்


மகாலிங்கம் சசிகுமார் என்ற சுவிஸ்குமார் இதற்கு முன் கற்பழிப்பு சம்பவங்களில் தொடர்பு உண்டு என்பதை இரகசிய பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் ஆசைக்கொண்ட சசிகுமாரின் பெண்களின் கற்பழித்து அதனை ஒளிப்பதிவு செய்து தனது நண்பர்களுக்கு அந்த ஒளிப்திவை காண்பித்து அதனை இணையத்தில் வெளியிடுவதே இவரின் பொழுதுபோக்காகும்.


புங்குடுதீவு ஊரில் வசிக்கும், ஈபிடீபி உறுப்பினரான பிரதேச சபை சாரதியுடன் வித்தியாவுடன் காதல் மலர்ந்துள்ளதுடன் அவள் அவனின் வேண்டுகோளை நிராகரித்துள்ளார். ஒருநாள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிய வித்தியாவின் கையை பிடிப்பதற்கு அவர் முயற்சி செய்துள்ளதோடு அதற்கு வித்தியா செருப்பால் அடித்துள்ளாள். அனைவரின் முன்னால் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் பெரும் அவமானத்திற்குள்ளான சாரதி வித்தியாவை பலிவாங்குவதற்கு எண்ணியுள்ளார்.


அது மட்டுமின்றி வித்தியாவின் குடும்பத்தினருடன் வழக்கு காரணமாகமனஸ்தாபங்கள் நிலவிவந்துள்ளதுடன் இரண்டு இளைஞர்களுடன் இந்த ஈபிடிபி உறுப்பினர் வித்தியாவை பலிவாங்குவதற்கு திட்டம் தீட்டியுள்ளார். அவர்கள் மூவரும் வித்தியாவை கற்பழிப்பதற்கு திட்டம் தீட்டியிருப்பது சுவிஸ்குமார் ஊடாக. அதற்கு தேவையான மதுபானங்கள் பெற்றுக்கொள்வதற்கு தேவையான பணத்தையும் அதனை ஒளிப்பதிவு செய்வதற்கான கெமராவையும் சுவிஸ்குமாரே பெற்றுக் கொடுத்துள்ளார்.


சம்பவம் இடம்பெற்ற நாளன்று காலை 7 மணிக்கு பாடசாலைக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற வித்தியா கட்டாயமாக கடத்துவதற்கு இந்த குழுவினர் திட்டம் தீட்டியிருந்துள்ளதோடு காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல வரை இவர்கள் அனைவரும் பாலடைந்த வீடொன்றில் வித்தியாவை கற்பழித்துள்ளனர். அதனை ஒளிப்பதிவு செய்துள்ளதோடு அந்த கெமராவை இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கெமராவின் மெமரிகார்ட்டை மறைத்துள்ளனர். இருப்பினும் தொழில்நுட்ப உதவியுடன் கெமராவில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவும் பெற்றுக் கொள்வதற்கு இரகசிய பொலிஸாரால் முடிந்துள்ளது.
வீடு திரும்பாத தனது புதல்வி வித்தியா தொடர்பில் அவரது குடும்பம் ஊர்கவற்துறை  பொலிஸில் புகார் செய்வதற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் 'அவளது காதலனுடன் ஓடிப் போயிருப்பாள் நாளையோ அல்லது மறுதினமோ வருவாள்' என்று தெரிவித்துள்ளனர். பாலடைந்த வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்ட்டது வித்தியா என பின்பு தான் தெரியவந்துள்ளது. வித்தயாவை அவளது பாதணி நூலிலேயே கழுத்து நெறித்து கொலை செய்துள்ளனர். தாங்கள் வித்தியாவை கற்பழித்த நபர்கள் இருவரும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.


இதுவரை வித்தியா தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்தும்  இரகசிய பொலிஸ் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் சந்தேகநபர்களுக்கு எதிராக மேல்நீதிமன்ற நீதிபதி மடுல்லக் (Trial-At-Bar) சந்தித்து வெகுவிரைவில் விசாரணைகள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன் பிரகாரம் பேராசிரியர் தமிழ்மாறன் மற்றும் சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்து.

« PREV
NEXT »

No comments