திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.570 கோடி பணம் தேர்தல் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் அருகே சென்ற 3 கண்டெய்னர் லாரிகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரி விஜயகுமார் தலைமையிலான படையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால், அந்த லாரிகள் நிற்காமல் செல்லவே, லாரிகளை விரட்டிச் சென்று செங்கம்பள்ளி சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில், கோவையில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு எஸ்பிஐ வங்கிக்கு ரூ.570 கோடி பணம் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால், அதற்காக உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த கண்டெய்னர் லாரிகளைக் கைப்பற்றி மாவட்ட தேர்தல் அலுவலரான திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்
No comments
Post a Comment