நல்லாட்சி அரசானது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்ச்சியாக விளையாடுவதோடு மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பினரின் தற்கொலை குண்டு தாக்குதல் உட்பட அனைத்துவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் வழியமைத்து கொடுக்கின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் விரவன்ச குற்றம் சுமத்தினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை இல்லாதொழித்து எமது பொருளாதாரத்தை நாளுக்கு நாள் சீரழிக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒரணியாக அணிதிரள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விமல் விரவன்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ஸ செய்தியாளர் மாநாட்டில் மேலும் குறிப்பிடுகையில் முன்னைய அரசின் கீழ் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பானது மிகவும் சக்திமிக்கதாக காணப்பட்டது. இன்று நல்லாட்சி என ஆட்சிபீடத்தில் இருக்கும் இந்த அரசாங்கமானது நாட்டின் தேசிய பர்துகாப்புடன் தொடர்ச்சியாக விளையாடிவருகின்றது.
நேற்று முன்தினம் யாழ்பாணம் மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் உள்ளிட்ட அபாயகரமான வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் அவை மீட்கப்பட்டுள்ளன. மறுபுரம் பொலிஸாரினால் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து யுத்த ஆயுதங்களும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று பொலிஸாரினால் மீட்கப்பட்ட ஆயிதப்பொருட்கள் அனைத்துமே தற்போது, புதுப்பிக்கப்பட்டவையாக காணப்படுகின்றன.
அத்துடன், கைப்பற்றப்பட்ட பொருட்களை பொதி செய்ய கடந்தவார சிங்கள பத்திரிகை ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதோடு சிம் அட்டைகள் ஐந்தும் அதில் உள்ளடங்கியுள்ளன, அந்த பொதியில் வெள்ளவத்தை என குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கமானது பொய் கதைகளை கூறி மக்களையும் எமது நாட்டையும் ஏமாற்ற முயல்வதோடு உண்மையான தகவல்களையும் மூடி மறைக்க முயற்சிக்கின்றது.
இவ்வாறு மீட்கப்பட்ட அனைத்து ஆயுத பொருட்களுமே கொழும்பிலோ அல்லது வேறு எதேனும் பிரதேங்களிலோ முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த நாசக்கார செயற்பாடுகளுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் சம்பவங்கள் மூலம் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது என்பதனை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
வடக்கு கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் இன்று இராணுவத்தினரின் செயற்பாடுகளை இந்த அரசாங்கமானது முற்றாக கட்டுபடுத்தியுள்ளதோடு சிங்கள, தமிழ் புதுவருடத்தை கொண்டாட முடியாத வகையில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினரை பொய் குற்றசாட்டுக்கள் மூலம் சிறையில் அடைத்துள்ளது.
ஆனால் உலக அளவில் மிகவும் கொடிய பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்த விடுதலை புலிகளின் செயற்பாடுகளை மீண்டும் எமது நாட்டில் தொடர்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து பல்வேறு உயிர் தியாகங்களின் மத்தியில் பெறப்பட்ட நாட்டின் தேசிய பாதிகாப்பின் உறுதி தன்மையினை மீண்டும் பயங்கரவாதிகளுக்கு தாரைவார்க்க முயற்சிக்கின்றது.
நால்லாட்சியை முன்னெடுப்பதாக சிறிசேன, விக்ரமசிங்க, தரப்பினர் கூறுகின்றனர். இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பை இல்லாதொழித்து எமது பொருளாதாரத்தை நாளுக்கு நாள் சீரழிக்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்ட அனைவரும் அணிதிரள வேண்டும். இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக இடமளிப்போமாயின் எமது நாடு இனிவரும் காலங்களில் பாராதூரமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
தகவல் அறியும் சட்டமூலம்
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரையில், ஊடகங்களுக்கும் மக்களுக்கும் எவ்வித தகவலை அறிந்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பாக கூறுவதாயின் இந்த சட்டத்தின் மூலம் இதுவரையில் ஊடகங்கள் உட்பட சாதாரண மக்களுக்கு கிடைக்கப்பெற்ற உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
எவ்வாறான நிலையிலும் பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலத்தினை நிறைவேற்ற இடமளிக்க போவது இல்லை. அந்தவகையில் இது தொடர்பில் சட்டநடவடிக்கையினை முன்னெடுக்க சட்டதரணிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார்.
No comments
Post a Comment