Latest News

April 01, 2016

புலிகள் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினார்கள்- சொன்ன பெண்ணுக்கு தி.மு.க சீட்டு
by admin - 0

"விடுதலைப்புலிகள் மீது "பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விடுதலைப்புலிகள் மீது, 'பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்' என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை. மாறாக புலிகள் இருந்த காலத்தில் பெண்கள் நிம்மதியா வாழ்ந்தார்கள் என்று தான் சிங்களவர்கள் கூட கூறியுள்ளார்கள். ஆனால் சற்றும் நா கூசாமல் இப்படி ஒரு பழியை பல ஆயிரம் நேயர்கள் முன்னர் தெரிவித்த சிவகாமி ஐ.ஏ.எஸ் க்கு தி.மு.க கூட்டணி சீட்டு கொடுத்துள்ளது.

அந்த சிவகாமிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் எம்ஜிஆருடன் இணக்கமாக இருந்தனர் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களை பழி தீர்க்க அலைந்தார் கலைஞர் என்று கூறப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் சிவகாமிக்கு சீட்டு கொடுத்தது மிகவும் பெரிய தவறு என்பதனை பலர் தற்போது கலைஞருக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது 'தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்' என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார். ஊடகம் என்ற வகையில் இதனை நாமும் சுட்டுக்காட்ட விரும்புகிறோம். 
« PREV
NEXT »

No comments