வவுனியாவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருட இறுதியில் வவுனியாவில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தம்மால் தேடப்பட்டு வந்த சந்தேக நபரே வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருடைய மோட்டார் சைக்கிளில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வவுனியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரு
வதாகவும் குறிப்பிட் டுள்ளனர்.
No comments
Post a Comment