Latest News

April 24, 2016

இலங்கையர்களின் தகவல்களை தர மறுக்கும் சுவிட்ஸர்லாந்து
by admin - 0

இலங்கையில் இருந்து கடந்த மார்ச் மாதம் சுவிட்ஸர்லாந்து சென்று அரசியல் புகலிடம் கோரிய 147 இலங்கையர்கள் பற்றிய தகவல்களை இலங்கை அரசுக்கு வழங்க சுவிஸ் அரசு மறுத்துள்ளது.

இலங்கையில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிகளே இந்த இலங்கையர்கள் அங்கு செல்ல வீசா அனுமதியை வழங்கியிருந்தனர்.

அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட பகுதி அரசியல்வாதிகள் மற்றும் கொழும்பில் உள்ள சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இவர்களுக்கு அரசியல் புகலிடத்தை வழங்குமாறு பரிந்துரைகளை வழங்கியிருப்பதாக கொழும்பில் வெளியாகும் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
« PREV
NEXT »

No comments