Latest News

April 23, 2016

தற்கொலையை தவிர வேறு வழியில்லை!! விரக்தியில் நளினி கணவர்
by admin - 0

சிறைத்துறை அதிகாரி ஒருவரால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறி, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலை மோசம் அடைந்ததால் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர ஆன்மிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் சிறைத்துறை கண்காணிப்பாளராக சண்முக சுந்தரம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

நள்ளிரவில் கைதிகள் அறையில் நுழைந்து சோதனை நடத்துவது, துப்பாக்கியை வைத்துக் கொண்டு கைதிகளை மிரட்டுவது என அடாவடியாக செயல்பட்டதால் கைதிகள் கொந்தளிப்பு அடைந்தனர். கடந்த வாரம் ராஜா என்ற கைதி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

இந்த நிலையில், தனது அறையில் சோதனை நடத்துவது, தன்னுடைய ஆன்மிக பாதையை கேலி, கிண்டல் செய்வது என சிறைக்கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம் அத்துமீறுவதால் மிகுந்த வேதனை அடைந்தார் முருகன்.

அவரது நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து 4 நாட்களாக சாப்பிடாமல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கண்காணிப்பாளரின் அத்துமீறல் தொடர்ந்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் முருகன் மனு கொடுத்திருக்கிறார்.

நன்றி : Vikatan
« PREV
NEXT »

No comments