Latest News

April 23, 2016

ஏன் தனித்துப் போட்டி: சீமான் விளக்கம்
by admin - 0

vivasaayi
மது, ஊழலை ஒழிப்பதற்காகத்தான் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

நாகர்கோவிலில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் மேலும் பேசிய அவர், மதுவை ஒழிப்போம் என்று கூறும் இரு கட்சிகளும் முதலில் தங்களின் கட்சிகளில் உள்ள உறுப்பினர்களின் மது ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது ஏன் ஒழிக்கவில்லை. படிப்படியாக மூடுவோம் என்கிறார் ஜெயலலிதா, இதே குமரியில் சசிப்பெருமாள் ஒரு கடையைத்தான் மூடச் சொன்னார். அந்தக் கடையே இன்னும் மூடவில்லை. படிப்படியாக குறைக்கக் கூடிய ஒரு அறிகுறியைக் கூட கடந்த 5 ஆண்டுகளில் காட்டவில்லை. அத்தனை போராட்டங்களுக்கும் பதில் சொல்லாமல், மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இப்போது தேர்தல் வந்தவுடன் படிப்படியாக குறைக்கிறோம் என்கிறார் ஜெயலலிதா. இது தேர்தலுக்கான வெற்று வாக்குறுதியாகத்தான் பார்க்க முடிகிறது. குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வி கட்டாயம் தேவை என்றார்.

அப்போது கூட்டத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர், சீமானை பார்த்து தலைவா... என்று குரல் எழுப்பினார். அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அந்த நபரை அடித்து இழுத்துச் சென்றனர். இதனை பார்த்த சீமான், 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் சாதனை இதுதான் என்றார்.
« PREV
NEXT »

No comments