Latest News

April 27, 2016

தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பயங்கரவாத விசாரனைப்பிரிவு அதிகாரிகளினால் கைது
by admin - 0

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன் கிழமை மதியம் பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து இன்று புதன் கிழமை மதியம் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது குறித்து வருகை தந்த பயங்கர வாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் அத்தாட்சி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த ப்த்திரத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ் அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை.
தற்போது இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments