Latest News

April 27, 2016

அடுத்த கைது கருணா ?
by admin - 0

அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தளபதிகளின் கைதுகள், கருணாவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

காவற்துறைத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

முன்னாள் தளபதிகளாக ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் 600 காவற்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்பட்டே கைதாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைதுகளுக்கு அடுத்ததாக மேலும் சில முன்னாள் தளபதிகளுடன்இ கருணாவும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
« PREV
NEXT »

No comments