Latest News

April 27, 2016

எங்களுக்கு நிம்மதியே இல்லையா? கண்ணீர் சிந்திய நகுலனின் தாயார்
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படையணியின் சிறப்பு தளபதியான (முன்னாள்) நகுலன் நேற்றைய தினம் இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ள்ள நிலையில், இன்றைய தினம் அவருடைய மனைவி யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்ற இயற்பெயரை கொண்ட நகுலன், சாள்ஸ் அன்டனி படையணியில் சிறப்பு தளபதியாக இருந்து பின்னர் இம்றான் பாண்டியன் படையணியின் சிறப்பு தளபதியாக இருந்த தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் நீர்வேலி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து, இலங்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் நகுலன் காலை 10 மணிக்கு கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் நகுலனின் மனைவி இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேலும் தனது கணவர் நகுலன் 2013ம் ஆண்டு புனர்வாழ்வின் பின் விடுதலை செய்யப்பட்டார் எனவும், அவருக்கு வேறு எந்த விதமான தொடர்புகளும் இல்லை எனவும் அவருடைய மனைவி கூறியிருக்கின்றார்.

இதேவேளை நகுலனின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,

2012ம் ஆண்டு எங்களுடைய பிள்ளையை மட்டக்களப்பில் வைத்து பிடித்ததாக எமக்கு தொலைபேசி வந்து, நாங்கள் கிளிநொச்சி சென்று பார்த்திருந்தோம்.

பிறகு 2013ம் ஆண்டு புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யப்ப ட்டு, திருமணம் முடித்துக் கொண்டு அமைதியாகவே வாழ்ந்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் தோட்டத்தில் நின்றிருந்த சமயம் வீட்டுக்கு வந்து பிடிக்க மாட்டோம் என கூறிவிட்டு, யாழ்ப்பாணம் வரை தகப்பனையும் அழைத்துக் கொண்டு போய், அங்கிருந்து அப்படியே கொண்டுபோய் விட்டார்கள்.

எங்கே கொண்டு சென்றார்கள் என தெரியாது. எங்களுக்கு நிம்மதியே இல்லையா என அவர் மேலும் கேட்டுள்ளார்

« PREV
NEXT »

No comments