Latest News

April 05, 2016

ஊடகவியலாளருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த சட்டவிரோத மண் அகழ்வாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சிப் பொலிசார் முறைப்பாட்டைப் பதிவுசெய்ய மறுப்பு.
by admin - 0

கிளிநொச்சிப் பொலிசார் சட்டவிரோத மண் அகழ்வாளர்களுக்கு ஆதரவு என்றால் அவர்களுக்கும் பங்கு கிடைக்கிறது.

கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு கிளிநொச்சிப் பொலிசார் தமது பூரண ஆதரவை வழங்கி தமக்கான பங்கையும் பெற்று வருகின்றார்களா?

இன்றைய தினம் கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தியைச் சேகரிக்கச் சென்ற கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவரை சட்டவிரோத மண் அகழ்வாளர்கள் தாக்க முற்பட்டதுடன் தமது சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்திகள் ஏதாவது ஊடகங்களில் வெளிவருமாகவிருந்தால் பேப்பர் தம்பி நீ கிளிநொச்சியில் உயிரோடு வாழமாட்டாய் எப்படியும் நாங்கள் உன்னைக் கொலைசெய்வோம் என்றும் தமக்குப் பொலிசாரின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் இருப்பதாகவும் கூறி ஊடகவியலாளருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

இவ்விடயத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கிளிநொச்சிப் பொலிசாரிடம் முறையிட்டு முறைப்பாடு பதிவுசெய்யச் சென்றபோது கிளிநொச்சிப் பொலிசார் ஊடகவியலாளரின் முறைப்பாட்டை ஏற்றுப் பதிவுசெய்ய மறுத்ததுடன் சட்டவிரோத மண் அகழ்வாளர்கள் பாவம்தானே அவர்களுடன் சமாதானமாய்ப் போங்கோ அதுதான் உங்களுக்கும் நல்லது என்று அறிவுரையும் கூறி அனுப்பியுள்ளார்களாம்.

இதிலிருந்து கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வின் பின் பலமாக பொலிசார் செயற்பட்டு வருவது வெளிப்படுகின்றது.

கிளிநொச்சியின் பன்னங்கண்டி, கோரக்கன்கட்டு, சிவபுரம், அக்கராஜன், திருவையாறு எனப் பல இடங்களிலும் சட்டவிரோத மண் அகழ்வு துணிகரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு கிளிநொச்சிப் பொலிசாரின் ஆதரவு இருக்கின்றமை இதிலிருந்து தெரிகின்றது.
« PREV
NEXT »

No comments