நாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியுள்ளதாக பொய்யாக பரப்புரை செய்து வரும் மைத்திரி நல்லாட்சியின் ஊடகத்துறை அமைச்சு. தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களை அலையவிட்டு ஏமாற்றி வருகின்றது.
நாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவுள்ளதாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சு கடந்த வருடம் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கான நேர்முகப்பரீட்ரை என்று கூறி ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களது தகுதிகள் பரிசீலிக்கப்பட்டிருந்ததன.
அந்நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை மக்கள் வங்கியினூடாக சலுகைக் கடன்; அடிப்படையில் மோட்டார் சைக்கிளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளுமாறு தாம் மக்கள் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஊடகவியலாளர்களுக்கு கடிதங்கள் மூலம் ஊடகத்துறை அமைச்சு அறிவித்திருந்தது. மற்றும் மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக மோட்டார் சைக்கிள்களை ஊடகவியலாளர்கள் விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி அனுமதிக்கடிதங்களையும் வழங்கியிருந்தார்.
ஊடகத்துறை அமைச்சர் கூறியபடி மக்கள் வங்கிகள் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை வழங்க பின்னடித்து இழுத்தடித்து வருகின்றதாக ஊடகவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
ஊடகத்துறை அமைச்சு ஊடகவியலாளர்களுக்கு, தாம் மோட்டார் சைக்கிள் பெற்று வழங்கியுள்ளதாகக் கூறி அனுமதிக்கடிதங்களை வழங்கிவிட்டு விளம்பரப்படுத்துகின்றபோதிலும் மக்கள் வங்கிகள் தமது இறுக்கமான நடைமுறையைப் பின்பற்றி ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிளுக்கான பணம் வழங்க மறுத்து வருவதாக ஊடகவியலாளர்களால் கூறப்படுகின்றது.
அதிலும் வன்னியைச் சேர்நத போரால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வங்கிகள் பணத்தை வழங்க மறுத்து வருகின்றன.
ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கியுள்ளதாகக் கூறும் ஊடகத்துறை அமைச்சர் வங்கியிடம் மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்குமாறு அறவித்துள்ளோம் மக்கள் வங்கி பணம் தந்தால் பெற்றுக்கொள்ளுங்கள் தராதுவிட்டால் எமக்கு அதைப்பற்றித் தெரியாது என்னும் நிலைப்பாட்டில் பொறுப்பற்ற நிலையில் இருப்பதாக ஊடகவியலாளர்களால் குற்றம்சாட்டப்படுகின்றது.
இவ்விடயம் தொர்பில் ஊடகத்துறை அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்பட் போதிலும் இவ்விடயத்தில் ஊடகத்துறை அமைச்சு கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என்று செயற்படுவதாகவும் இத்திட்டத்தை விரைவாக முடிக்கவுள்ளதாகவும் கூறிவருவதாக ஊடகவியலாளர்களால் கூறப்படுகின்றது.
No comments
Post a Comment