திருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம் காலையில், புலிகளின் முன்னாள் தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி திருக்கோவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இந்த நிலையில், ராம், கடத்தப்படவில்லை என்றும், தீவிரவாத விசாரணைப் பிரிவினால், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக நேற்று பொலிஸ் பேச்சாளர் அறிவித்திருந்தார்.
திருக்கோவிலில் கைது செய்யப்பட்ட ராம், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்தே, அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ராம் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தை, பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment