Latest News

April 26, 2016

தளபதி ராம் கைதினை அடுத்து தளபதி நகுலன் கைது
by admin - 0

தமிழீழ விடுதலைப்  புலிகளின்  சாள்ஸ் அன்டனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்றைய தினம் காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என கூறப்பட்டிருந்த நிலையில், நீர்வேலி பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் முடித்திருந்தார்.இந்நிலையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு சிவில் உடையில் நீர்வேலி கந்தசாமி கோவிலடி நீர்வேலி தெற்கு என்னும் விலாசத்தில் உள்ள இவருடைய இல்லத்திற்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் நகுலன் என்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதியை கைது செய்துள்ளனர்.

நகுலன் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் கூறப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments