Latest News

April 27, 2016

600 பொலிஸாரின் கொலையுடன் ராமுக்கு தொடர்பாம்!
by admin - 0

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம், 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப்பிரிவின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ராமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் குழுவொன்றைக் கடத்தி அதில் 600 பொலிஸாரை படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புடையவர் என்றும் அறியமுடிகின்றது. 

இராணுவத்தினரால்  2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், கிழக்கு மாகாண இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தப்பியோடிவிட்டார். நான்கு நாட்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட ராம், 2013ஆம் ஆண்டில் விடுதலையாகி, திருமணம் முடித்த நிலையில், தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments