குளத்தில் குளித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச்சென்ற ஒருவர் பலயாகியுள்ளார்.
இன்று மதியம் ஒருமணியளவில் குளத்தில் குளிக்கச்சென்ற 2ம் வட்டாரம் கைவேலி புதக்குடியிருப்பில் வசித்தவரும் தற்போது புளியம் பொக்கனையில் வாழ்ந்துவருபவருமாகிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான யோகேஸ்வரன் முரளிதரன் (வயது-32) என்ற இளம்குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்
இதுதொடர்பான மேலதிக விசாரனைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments
Post a Comment