Latest News

April 05, 2016

யாழில் ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பொலிஸாரால் மீட்பு
by admin - 0

யாழ்.கொடிகாமம் உசன் பகுதியில் கொழும்பு கொண்டு செல்லப்படுவதற்கு தயார் படுத்தப்பட்டிருந்த 96 கிலோ கேரள கஞ்சா போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார்.

நேற்றைய தினம் கஞ்சா யாழ்ப்பாணம் ஊடாக கொழுப்புக்கு கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வந்து மேற்படி போதைப் பொருட்களை மீட்டுள்ளனர்.

இரவு 11 மணிக்கு மேற்படி போதைப் பொருளை பயணிகள் பேருந்து ஊடாக கொழும்பு கொண்டு செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் உசன் சந்திக்கு எடுத்துவந்திருந்த நிலையில் போதைப் பொருள் தடுப்பு பொலிஸார் கஞ்சா கடத்திவந்த நபரை சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த போதைப் பொருளை எடுத்து வந்த நபர் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் குறித்த நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். இதேவேளை குறித்த 96 கிலோ போதைப்பொருளின் விலை 1 கோடியே 38 லட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments