சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஏகாதசி தினமான இன்று ஜெயலலிதா வெளியிட்டார். தமிழகத்தில் அதிமுக 227 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் கேரளாவில் 7 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. முகாமில் நேர்காணல் முடிந்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது
அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் சென்னையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 6ம் தேதி முதற்கட்ட நேர்காணல் நடைபெற்றது. 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. சென்னையில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள், திருவாரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சில தொகுதிகளுக்கு இதுவரை நேர்காணல் நடக்கவில்லை. இந்த நிலையில் ஏகாதசி தினமான இன்று வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா
No comments
Post a Comment