கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் ஈராண்டு ஆசிரிய பயிற்சியை முடித்துக்கொண்ட ஆசிரியர்கள் நேற்றுடன் பரீட்சை முடிந்து வெளியேறியுள்ளார்கள்.
கோப்பாய் ஆசிரிய கலசாலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டு வந்த 657 ஆசிரிய பயிலுநர்கள் தமது ஈராண்டு கால பயிற்சிகள் கடந்த பெப்ரவரி மாதம் முடிந்ததைத் தொடர்ந்து இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நாடுபூராகவுமுள்ள ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரிய பயிலுநர்களுக்கு நடாத்தப்பட்ட இறுதிப் பரீட்சையில் தோற்றி நேற்று 2 ஆம் திகதி பரீட்சை முடிந்த பின்னர் கலாசாசாலையை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஈராண்டு காலம் ஆசிரியப் பயிற்சியை மேற்கொண்டு வெளியேறிய ஆசிரிய பயிலுநர்களில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மீண்டும் பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்காக நாளை திங்கட் கிழமை முதல் பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளனர்.
பயிற்சியை முடித்துக்கொண்ட ஆசிரிய பயிலுநர்களது பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்த பின்னர் இவர்களுக்கு ஆசிரியர் சேவை தரம்- 3-I இற்கு ஆசிரியர் தரமுயர்த்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments
Post a Comment