அரசியல் பொது வாழ்க்கை வேண்டாம் என்று, சும்மா இருக்கும் என்னை சில தமிழர்கள் சீண்டிப் பார்கிறார்கள். என்னை ஒரு சொத்தையாக்கி. எதும் ஆகாத ஆள் போல ஊடகங்கள் படம் போட்டு காட்டுகிறது. இவை எல்லாம் மகிந்த வீட்டுக்குப் போனதால் நடந்தது. அவர் ஆட்சியில் இருக்கும் போது எப்படி எல்லாம் நான் இருந்தேன்.. என்று கதறியுள்ளார் கருணா.
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருக்கு. அதனால் நாம் முன் நாள் புலிகள்(பெரிய புள்ளியை) ஒருவரை சிறையில் அடைப்பது போல அடைத்தால் தான் சில அழுத்தங்களை சமாளிக்கலாம் என்று கூறியே பிள்ளையானை சிறையில் அடைத்தார்கள். நீங்கள் சில காலம் சிறையில் இருங்கள் பின்னர் உங்களை வெளியே விடுவோம் என்று கூறினார்கள்.
அதனை நம்பி தான் பிள்ளையான் உள்ளே சென்றான். ஆனால் என்ன நடந்தது ? ரணில் தனது நரிப் புத்தியை காட்டிவிட்டார் என்று , மட்டக்களப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தொடர்புகொண்ட கருணா போனில் கதறியுள்ளார். நான் இறந்துவிட்டதாக , ஏப்பில் 1ம் திகதி முட்டாள்கள் நாளில் அறிவித்தார்கள். மகிந்த ஆட்சி காலத்தில் இது நடந்திருந்தால். இச்செய்தியை வெளியிட்ட அனைத்து இணையங்களையும் நான் இலங்கையில் முடக்கி இருப்பேன் என்று வேறு கடுமையாக கூறியுள்ளார் கருணா.
இந்த அரசாங்கம் எத்தனை நாட்கள் நிலைக்கும் என்று நானும் பார்க்கத்தானே போகிறேன். இப்படி ஆட்டம் போட்ட பலர் இறுதியில் வீட்டுக்குச் சென்ற பல கதைகள் உள்ளது என்று கூறி, தன்னை தானே சாந்தப்படுத்தியுள்ளாராம் கருணா. கொழும்பு வீட்டில் அடைபட்டுள்ள கருணா. தற்போது அதிகமாக பேஸ் புக்கில் நேரத்தை செலவு செய்வதோடு. செய்தி இணையங்களை பார்த்து உலக நடப்புகளை தெரிந்து வருகிறாராம். கருணாவுக்கு எடுபிடியாக வேலைபார்த்த பலர். அவரை விட்டு விலகி , குவைத் கட்டார் போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்கள். இதனால் மேலும் தனிமையில் கருணா வாடுகிறார். அவரது மனைவியும் பிரிந்து சென்று பல வருடங்கள் ஆகிறது. அவரது மனைவி லண்டனில் இருக்க அஞ்சி, தற்போது அயர்லாந்தில் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
No comments
Post a Comment