நாடு முழுவதும் 84 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு “இலங்கை காடு வளர்ப்பு அமைப்பு“ நடவடிக்கை எடுத்துள்ளது.
காடு வளர்ப்பையும் மரங்கள் நாட்டுவதையும் மக்களிடம் ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மரக்கன்று நடும் நடவடிக்கை கொட்டாவ காட்டுப் பிரதேசம், சப்ரகமுவப் பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை கடற்படை முகாம் காட்டு பிரதேசம் ஆகியவற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இரத்தினபுரி, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களை http://www.reforestsrilanka.com/ என்ற இணையத்தளத்திலும், https://www.facebook.com/reforestsrilanka/ என்ற பேஸ்புக் பக்கத்திலும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு 0772834561, 0772271270, மற்றும் 0773598513 ஆகிய தொலைபேசி இலக்கங்கங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments
Post a Comment