Latest News

April 18, 2016

சிறிலங்காவை கண்காணிக்கும் அனைத்துலக நிபுணர் குழுவிற்கு ஆதரவு கோரும் திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம்
by admin - 0

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தினை மையமாக கொண்டு, நீதிப்பொறிமுறை அமைவுகளை கண்காணிக்கும் செயல்முனைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்துலக நிபுணர்குழுவுக்கு உறுதுணை வழங்குமாறு திரைப்பட இயக்குனர் மு.களஞ்சியம் அறைகூவல் விடுத்துள்ளார்.

அனைத்துலக மட்டத்தில் மனிதஉரிமை விவகாரங்களிலும், அனைத்துலக நீதிமன்ற அமைப்புக்களிலும் பங்காற்றி வரும் நிபுணர்களை உள்ளடக்கியதான இக் கண்காணிப்புக் குழுவினை நாடுகடந்த தமிழழீ அரசாங்கம் நிறுவியுள்ளது.

இந்நிலையில், ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கான போராட்டத்தில், இந்த நிபுணர் குழுவின் செயற்பாடுகளை முழுமையாக முன்னெடுப்பதற்கு உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் தமது பங்களிப்புக்களை வளங்க முன்வரவேண்டும் என இயக்குனர் மு.களஞ்சியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

2009 இறுதி யுத்தத்திலே இலட்சக்கணக்கிலே படுகொலைசெய்யப்பட்ட எமது ஈழத்து சொந்தங்களிற்கு சர்வதேச அரங்கிலே நீதிகிடைக்க வேண்டும் என்ற ஒரே முனைப்புடன் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் கடுமையான போராட்டதின் விளைவாகவே இன்று ஐ.நா.மன்றம் தமிழர்களிற்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எவன் இலட்சக்கணக்கிலே எமது மக்களை கொன்றுகுவித்தானோ எவன் மானு டத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்தானோ அவனின் கையிலே இந்த விசாரணையை மேற்கொள்ளும்படி ஐ.நா.மன்றம் ஒப் டைத்திருப்பது வேதனைக்குரியது.

இந்த இடத்திலே ஏதோ நடக்கிறது நடக்கட்டும் என்று நாங்கள் மவுனமாக இருந்து விடமுடியாது. பாதிக்கப்பட்ட நமது மக்களிற்கு நீதியிலும் எவ்வளவு தூரம் அநதீp இழைக்கப்படுகின்றது என்பதை கண்காணிப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக நிபுணர்குழுவை நியமித்துள்ளது.

இந்த நிபுணர்குழுவின் செய்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என
இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்க சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய இக்குழுவின் செயற்பாடுகளை http://warmap.org/-victims- இந்த இணையத்தளில் காண முடியம்.

இந்த ஆயுத் திட்டத்திற்கு நிதி உதவி வழங்க http://www.tgte-us.org/ என்ற இணையத்தில் ‘கண்காணிப்புக்கும் பொறுப்புக்கூறலுக்குமான குழு’ பொத்தானை அழுத்தி பங்களித்துக் கொள்ள முடியும். அல்லது நாடுவாரியான நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள், ஒருங்கமைபாளர் மூலம் பங்களிக்க முடியும்.

« PREV
NEXT »

No comments