Latest News

April 14, 2016

சாவகச்சேரி தற்கொலை அங்கி வெளிநாட்டில் வசிக்கும் இரு இலங்கையர் சம்பந்தமா ?
by admin - 0

eelamalar
சாவகச்சேரி பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

அதன்படி குறித்த சம்பவத்துடன் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
« PREV
NEXT »

No comments