இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு றோயல் கல்லூரியில் ஆரம்பமானது.
எதிர்வரும் 23ம் திகதி வரை நடைபெறவுள்ள மேற்படி போட்டியில் மாவட்ட மட்டத் தெரிவுப்போட்டிகளில் தெரிவான 2500 இற்கும் மேற்பட்டோர் விளையாடி வருகின்றனர்.
இப்போட்டிகள் 8 வயதின் கீழ், 10 வயதின் கீழ், 12 வயதின் கீழ், 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக நடைபெறுகின்றன.
இப் போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடங்களைப் பெறுபவர்கள் ஆசிய, சர்வதேச மட்டங்களில் நடைபெறும் இளையோர் சதுரங்கப் போட்டிகளில் பங்குபற்றும் தகுதியினைப் பெறுவர்.
தேசிய மட்டப் போட்டிகளில் வடக்கு மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட வீர்ர்கள் மட்டுமே பங்கு கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாவட்ட வீர்ர்களும் பங்குகொள்ளவில்லை. தமிழ் மாவட்ட வீர்ர்கள் தேசிய மட்ட சதுரங்கப் போட்டிகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது தொடர்பில் விசனம் தெரிவிப்பதுடன் , வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினரும் , மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினரும் இது விடயத்தில் பாராமுகமாக இருப்பதும் கவலையளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment