இலங்கை தமிழ் அரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட துணை தலைவர் பதவியில் இருந்து தான் இன்றுடன் (21) ராஜினாமா செய்வதாக பொன்.காந்தன் அறிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எனது மதிப்பு என்றும் உண்டு எனவும் பொன்காந்தன் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் எந்த பங்காளிக்கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளேன் என்பதை அறிவிக்க உள்ளதாகவும் தனது பணி மக்களுக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக தொடருமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் நெருங்கிய சகாவாக இருந்த பொன்.காந்தன் தற்போது பிரிந்து சென்றுள்ள நிலையில் இவ்வறிவிப்பினை விடுத்துள்ளார்.
முன்னதாக தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் வைத்து தான் கைது செய்யப்பட்டமை மற்றும் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் தனது முகநூல் ஊடாக பலவிடயங்களினை பொன்.காந்தன் பகிர்ந்துள்ளார்.
No comments
Post a Comment