Latest News

April 22, 2016

உருத்திரபுரம் அபிவிருத்தி தொடர்பில் சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு.
by admin - 0

உருத்திரபுரம் அபிவிருத்தி தொடர்பில் சிறீதரன் எம்.பி யிடம் எடுத்துரைப்பு.

உருத்திரபுரம் பகுதியின் அபிவிருத்தி நிலை தொடர்பில் அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் எடுத்துரைத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி யிடம் தமது பகுதியிகள் கிராமிய அபிவிருத்திகளில் புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் தமது பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று ஆவன செய்யுமாறும் மக்கள் கோரியிருந்தார்கள்.

உருத்திரபுரம் கிராமத்தில் பெருமளவு மக்கள் வாழ்கின்றபோதிலும் அக்கிராமத்திற்குச் செல்கின்ற பிரதான வீதி உட்பட கிராமத்தின் குறுக்கு வீதிகள் திருத்தியமைக்கப்படாத நிலையில் மோசமான நிலையில் காணப்படுகின்றன. 

இது குறித்து அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் 'எமது பகுதிகளில் பெருமளவான மக்கள் வாழ்கின்றார்கள். இப்பகுதிகளின் வீதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் திருத்தியமைக்கப்பட்டமையடுத்து நீண்ட காலமாக இன்னமும் திருத்தியமைக்கப்படாத நிலையில் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்த வீதிகளாகக் காணப்படுகின்றன. கடந்த கால அரசாங்கங்கள் தமது பகுதியின் அபிவிருத்தியைப் புறக்கணித்ததாக தாம் கருதுவதாகவும்' மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

மக்களது கருத்துக்களைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

உருத்திரபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடனான இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் கொள்கை பரப்புச் செயலாளருமான அ.வேழமாலிகிதன், உருத்திரபுரம் பகுதி கட்சியின் அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







« PREV
NEXT »

No comments