குமுழமுனையில் இராணுவ அதிகாரியின் மோட்டார்சைக்கிள் மோதி பொதுமகன் படுகாயம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனைப்பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை குமுழமுனை இராணுவ முகாமுக்கு முன்பாக அப்பகுதி இராணுவ அதிகாரியின் மோட்டார்சைக்கிளும் பொதுமகனது மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இராணுவ அதிகாரியும் பொதுமகன் ஒருவரும் சிறியகாயங்களுடனும் மற்றுமொரு பொதுமகன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குமுழமுனையை சேர்ந்த 21 வயதுடைய லிங்கநாதன் துஸ்யந்தன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிசாஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
No comments
Post a Comment