Latest News

April 24, 2016

முன்னாள் தளபதி ராம் அம்பாறையில் கடத்தல்
by admin - 0

புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் என்பவரை திருக்கோவில் தம்பிலுவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை இனம் தெரியாதவர்களினால் வான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

இவர், விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட தளபதியாக இருந்து 2009 ம் ஆண்டு இராணுவத்தினரால் திருகொணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு,

பின்னர் 2013 ம் ஆண்டு விடுதலையாகி திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்துவருவதுடன் விவசாயம் செய்து கொண்டு வருகின்றார்

இந் நிலையில் மனைவி மட்டக்களப்பிற்கு சென்ற நிலையில் தனிமையில் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இருந்தபோது அன்றைய தினம் காலை 8.30 மணியளவில் அவரது வீட்டிற்கு நீல நிறவான் ஒன்றில் வந்தவர்களால் அவரை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சுதாராணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதா பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பாக திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
« PREV
NEXT »

No comments