Latest News

April 22, 2016

மீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
by admin - 0

மீன் ஏற்றுமதி தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம் 





இலங்­கை­யி­லி­ருந்து கட­லு­ண­வுகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்­வ­தற்கு விதிக்கப்பட் டிருந்த தடையை ஐரோப்­பிய ஒன்­றியம் நீக்­கி­யது. இந்த அறி­விப்பை கடற்றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர நேற்று வெளியிட்டார்.

இத்­தடை நேற்று வியா­ழக்­கி­ழமை தொடக்கம் நீக்­கப்­பட்­டுள்­ள­தாக ஐரோப்­பிய ஒன்­றியம் அறி­வித்­துள்­ள­தா­கவும் அமைச்சர் குறிப்­பிட்­டுள் ளார்.

அம்­பாந்­தோட்­டைக்கு நேற்று வியா­ழக்­கி­ழமை விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த அமைச்சர் மஹிந்த அம­ர­வீர மாலை 3.30 மணி­ய­ளவில் நடத்­திய விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டி­லேயே இந்த தக­வலை வெளி யிட்டார். தொடர்ந்து அமைச்சர் தக வல் வெளியிடுகையில்;

இலங்­கை­யி­லி­ருந்து மீன்கள் உட்­பட கட­லு­ணவுப் பொருட்­களை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு ஏற்­று­மதி செய்­த­வ­தற்கு எமது நாட்டிற்கு தடை
விதிக்­கப்­பட்­டது.

எமது நாட்டு மீன­வர்கள் சர்­வ­தேச கடல் சட்டவிதிகளை மீறி சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்­டுள்­ள­த­னா­லேயே இந்த தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் அமுல்படுத்தியது.

இந்த தடை கடந்த ஒரு வரு­ட­கா­ல­மாக நீடித்­தது. இதனால் இலங்­கைக்கு 16000 மில்­லியன் ரூபா வரு­மான நஷ்டம் ஏற்­பட்­டது. எனவே எமது மீன­வர்கள் மீண்டும் சர்வ­தேச சட்டங்களை மீறாது கவ­னத்­துடன் செயற்­பட வேண்டும். இல்­லா­விட்டால் மீண்டும் இந்த தடை விதிக்­கப்­ப­டலாம். எனவே கவ­ன­மாக செயற்­பட வேண்டும்.

அதோடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது ஜேர்மன் மற்றும் வெ ளிநாட்டு விஜ­யங்­க­ளின்­போது இந்த தடையை நீக்­கு­வ­தற்­காக வெ ளிநாட்டு தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினார். அதே­போன்று பிர­தமர் ரணில்­விக்­கி­ரம சிங்க மற்றும் பிர­தமர் அலு­வ­ல­கமும் இந்த தடை நீக்கம் தொடர்பில் பல பிர­யத்­த­னங்­களை முன்­னெ­டுத்­தது.

அத்­தோடு எமது சார்பில் மீன்­பி­டித்­து­றையில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய மாற்­றங்கள், துறைசார் விட­யங்கள் தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியம் முன்­வைத்த யோச­னைகள் மற்றும் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றினோம்.
இவ்­வாறு அனைத்து தரப்­பி­னரின் அர்ப்­ப­ணிப்­புடன் இன்று எமக்­கெ­தி­ரான தடை நீக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

நேற்று பிர­ஸஸ்ஸில் கூடிய ஐரோப்­பிய ஒன்­றிய பிர­தி­நி­திகள் இலங்­கையின் செயற்­பா­டுகள் தொடர்பில் திருப்தி கொண்டு தடையை நீக்­கி­யுள்­ளனர். கடந்த ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக விதிக்­கப்­பட்­டி­ருந்த இந்த தடையை நீக்­கு­வ­தற்­காக ஜன­வரி 8 ஆம் திகதி ஜனா­தி­பதி பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments