Latest News

April 22, 2016

ஏழு வருடங்கள் கடந்து உயிருடன் இல்லை என்று இனம்காணப்பட்ட கணணிப்பிரிவுப் போராளி (படங்கள் இணைப்பு)
by admin - 0

யுத்தம்  முடிவடைந்து  ஏழு  வருடங்கள்  கடந்த  நிலையில்  உயிரோடு இருக்கின்றார் என்று உறவினர்களால் நம்பப்பட்ட கணணிப் பிரிவுப் பெண் போராளி ஒருவர் முகப்புத்தகத்தில்  நபர்  ஒருவர்  பதிவேற்றிய அவருடைய   புகைப்பட  ஆதாரத்துடன் இறந்துள்ளார் என்று அவர்களுடைய உறவினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது .

மேற்படி  இன்று அவர்களுடைய  உறவினர்களால்  அடையாளம் காணப்பட்ட கணனிப்பிரிவுப் போராளியான  மேகாலா  இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை நின்றுள்ளதாகவும் தாங்கள்  கண்டதாகவும் பின்னர்  இன்றுவரை  என்ன  நடந்தது என்று தெரியவில்லை  எனவும்  எனினும் உயிரோடு  இருப்பார்  என்று நம்பியிருக்கையில் முகப்புத்தகத்தில்  நபர்  ஒருவர்  பதிவேற்றிய  புகைப்பட ஆதாரத்துடன் அவர் இறந்துள்ளார்  என்பதை  உறுதி  செய்வதாகவும் தெரிவித்த அவர்கள் அவர் எப்படி கொல்லபட்டார் என்பதை உறுதிசெய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.

அத்துடன்  இறந்துள்ளார் என  அடையாளம்  காணப்பட்ட  கணணி பிரிவு போராளியான மேகலா, கணணிப் பிரிவுப் போராளியான லெப்கேணல் கோகுலனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.லெப் கேணல் கோகுலன் மன்னார் புத்துவெட்டுவான் சமரில் உயிரிழந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.



« PREV
NEXT »

No comments