சீனாவில் தயாரிக்கப்பட்ட நவீனரக ரிவோல்வர் உட்பட 4 துப்பாக்கிகள் மற்றும் ரவைகளுடன் இரு சந்தேக நபர்களை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கிம்புலாபிட்டிய, லெம்ரோக்வத்தை, கல்மங்கட பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒருவரும், கிம்புலாபிட்டிய விகாரை முன்பாகவுள்ள வீதியில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களாவர்.
பாதாள உலகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இந்த சட்டவிரோத ஆயுதங்களை குற்றச் செயல்களுக்கு பயன்படுத்திவிட்டு, பல்வேறு இடங்களில் மறைத்து வைத்துள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்து தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
No comments
Post a Comment