யாழ் உரும்பிராயை பூர்வீகமாகக் கொண்ட தங்கையா பாக்கியம் தம்பதிகள் விடுதலை புலிகள் அமைப்பை ஆரம்பகாலம் தொடக்கம் ஆதரித்து விடுதலை போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இதன் காரணமாக தங்கையா அவர்கள் இந்திய இராணுவ காலப்பகுதியில் சுட்டுகொலை செய்யப்பட்டார்.
இவரது மனைவி பாக்கியம் கணவர் இறந்த பின்பும் போராட்டத்துக்கு உதவிகள் செய்து வந்தார்.இதன் காரணமாக இவரும் 1988 ல் ஒட்டுக் குழுவினரால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இவருக்கு தேசிய தலைவர் மேதகு.வே..பிரபாகரனால் தியாகி பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இதன்பின் இவர்களது மகனான தங்கையா இராஜகுலசிங்கம் (லெப்.கேணல்.கதிர்) மற்றும் அவரது தங்கைகள் இருவர் என ஒருவர் பின் ஒருவராக விடுதலை போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
லெப்.கேணல். கதிர் ஆரம்பகாலப்பகுதியில் அரசியல் துறையின் கீழ் நிதித்துறையில் இயங்கி வந்தார்.
இவரது திறமைகள் காரணமாக 1996 ல் புலனாய்வுத் துறையின் கீழ் பொட்டு அம்மானால் இணைக்கப்பட்டார். விடத்தல்தீவு சமரில் இவரைப் பற்றிய தகவல்கள் தருபவர்களுக்கு பல லட்சங்கள் சன்மானம் வழங்கப்படும் என இலங்கை அரசால் கூறப்பட்டது.
அச்சமரில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக இந்தியா சென்று மருத்துவம் செய்துவிட்டு திரும்பும் போது மன்னார் கடலில்வைத்து கடற்படையினரால் நடாத்தப்பட்ட பாரிய தாக்குதலில் கடுமையான தீக்காயங்களுடன் உயிர் தப்பியவர் இவர் மட்டுமே,
இவருடன் வந்த போராளிகள் அனைவரும் இறந்துவிட்டனர்.இதன் பின் இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய இரகசிய உறுப்பினராகவே இறுதிவரை இருந்தார், இவரது தங்கைகளான கடற்கரும்புலி சாமந்தி மற்றும் வீரவேங்கை மாதுரி இருவரும் வீரச்சாவடைந்துவிட்டனர்.
ஏற்கனவே லெப்.கேணல்.கதிர் புலனாய்வுதுறையில் போராளியாக இருந்த சுஜாதா (ப்ரியா )என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சக போராளிகளுள் லெப்.கேணல்.கதிர் சரணடைந்துள்ளார்,
சனல் 4 வெளியிட்ட வீடியோவிலும் போட்டோக்களிலும் இருத்திவைத்திருக்கும் படங்களும் பின்னர் சுட்டுகொலை செய்யப்பட்டு குப்பறக் கிடப்பது லெப்.கேணல்.கதிராகும் அவர் கையில் இருக்கும் தீக்காயங்களே அவர் என்பதனை நன்கு இனங்காட்டுகின்றது இத்தகவலை அவரது மனைவியின் அக்கா மகளான நிசாந்தி என்பவரை வைத்து உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments
Post a Comment