மின்வெட்டு இடம்பெறும் இடங்கள் மற்றும் நேரங்கள் தொடர்பான பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயலிழந்துள்ளமையே, நாட்டின் பல பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படக் காரணமாகியுள்ளது எனவும் குறித்த மின்நிலையத்தைப் பார்வையிடுவதற்காக மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அங்கு சென்றுள்ளார் என்றும் மின்சார சபையின் முகாமையாளர் எம்.சி.விக்கிரமசேகர தெரிவித்தார்.
எதிர்வரும் இரு நாட்களில், நாளொன்றுக்கு ஏழரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மின்வெட்டானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்று தெரிவித்த அமைச்சு, காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரையிலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் கூறியது.

No comments
Post a Comment