அத்திலாந்திக் சமுத்திரத்தில் பெர்முடா முக்கோணம் (சாத்தானின் முக்கோணம்) என அழைக்கப்படும் பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களும் அதற்கு மேலாக பறக்கும் விமானங்களும் மர்மமான முறையில் காணாமல்போவது நீண்ட காலமாகவே எவரும் அறியாத புதிராக இருந்து வருகிறது.
இந்நிலையில் மேற்படி பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தில் சமுத்திரத்தின் அடியில் பாரிய எரிமலை வாய்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாகவும் அந்தப் பிராந்தியத்தில் கப்பல்களும் விமானங்களும் மர்மமாக மறைவதற்கு மேற்படி எரிமலை வாய்களே காரணம் என நம்புவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இயற்கை எரிவாயு வளம் மிக்க நோர்வேயின் கடற்கரைக்கு அப்பால் சமுத்திரத்தில் அரை மைல் அகலமும் 150 அடி ஆழமும் கொண்ட மெதேன் வாயுவால் நிரம்பிய பாரிய எரிமலை வாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நோர்வேயின் ஆர்டிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்கு மத்திய பாரென்ட்ஸ் கடலின் கீழுள்ள பெருந்தொகையான எரிமலை வாய் கள் காரணமாக அவற்றிலிருந்து அளவுக்கதிகமான மெதேன் வாயு வெளியிடப்படுவதால் அந்தப் பிராந்தியத்திலான சமுத்திர மேற்பரப்பு சூடாகி அந்த மேற்பரப்பிலும் அதற்கு மேலும் பயணிக்கும் பொருட்கள் சமுத்திர அடித்தளத்தை நோக்கி உள்வாங்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெர்முடா முக்கோணப் பிராந்தியம், வட அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிரித்தானியா வின் கடலுக்கு அப்பாலான பிராந்தியங்களி லிருந்து அமெரிக்க புளோரிடா கடற்கரை மற் றும் புயர்ரோ றிக்கோ வரையான பிரதேசத்தை உள்ளடக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment