தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார் என்ற சரத் பொன்சேகாவின் கருத்தால் ஸ்ரீலங்காவில் அதிர்ச்சி தீ பரவுயுள்ளது இதனால் ஸ்ரீலங்கா அரசு ஒரு விசாரணை மேற்கொள்ளும் அளவுக்கு சர்ச்சை வெடித்துள்ளது
இந்த தகவல் பற்றி ஸ்ரீலங்கா அமைச்சர் தெரிவிக்கையில்
யுத்தம் முடிக்கப்பட்ட விதம் மற்றும் இறுதி தருணங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படையாகக் கூறுவதற்கு இத்தனை காலமாக மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் இராணுவத்தளபதியே இறுதி தருணத்தில் குற்றங்கள் இடம்பெற்றன எனவும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் கூறுவதனை சாதாரண மாகக் கொள்ளக்கூடாது. சரத்பொன்சேகா வின் கருத்தினால் திருப்பு முனை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார் .
பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது
கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் சரவதேச விசாரணைகள் அவசியம் எனவும் பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தார் எனவும் அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இத்தனை காலமாக வெளிவராத உண்மைகள் இன்று உரிய நபரின் மூலமாக வெளிவந்திருப்பது முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இறுதி யுத்தத்தை வழிநடத்திய அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா மூலமாக இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது ஆரோகியமான விடயமாகும்.
ஆனால் யுத்தத்தை எவ்வாறு முடித்தனர் என்பதில் தான் சர்வதேச தரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது. இறுதி தருணங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இத்தனை காலமாக மஹிந்த ராஜபக் ஷ தரப்பு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் யுத்தத்தை முன்னெடுத்து சென்ற தளபதியே இறுதி தருணத்தில் குற்றங்கள் இடம்பெற்றது எனவும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் சரவதேச விசாரணை வேண்டும் எனவும் கூறுவதை சாதாரணமாகக் கொள்ளக்கூடாது.
எவ்வாறு இருப்பினும் சர்வதேச தரப்பின் பரிந்துரைகள் தொடர்பில் நாம் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இறுதி யுத்தத்தில் மோசமான வகையில் தவறுகள் நடைபெற்றிருந்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என இனங்காணப்பட்டு அவர்கள் தொடர்பில் சட்ட நடடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். இப்போது சரத் பொன்சேகா இவ்வாறு கருத்துகளை முன்வைத்துள்ள நிலையில் இதையும் ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
அதேபோல் உண்மையில் இறுதி யுத்தத்தில் எமது இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தால் அவை தொடர்பில் விசாரிக்க வேண்டும். இறுதி தருணங்களில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலோ அல்லது புகழையும் பெயரையும் தக்கவைக்கும் வகையிலோ ஒருசிலர் மோசமான வகையில் செயட்பட்டிருந்தால், சரத் பொன்சேகா கூறியதைபோல் மோசமான வகையில் இவர்கள் மக்களை கொன்று குவித்திருந்தால் அந்த குற்றங்கள் தொடர்பில் தனிப்பட்ட விசாரணைகளை மேற்கொண்டே தீரவேண்டும்.
ஒருசிலர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றவாளிகளாக நிறுத்த முடியாது.
இராணுவத்தை தலைமைதாங்கும் எவரேனும் தமது தனிப்பட்ட அதிகாரத்தில் மக்களை அழித்திருந்தால் அதை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டியது எமது கடமையாகும்.
மேலும் பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்த உண்மைகள் அனைத்தையும் கண்டறிய அரசாங்கம் முன்வரும். அதேபோல் இப்போது வென்றெடுத்துள்ள சமாதானம், நாட்டின் அமைதியான சூழல் மீண்டும் பாதிக்கப்படக்கூடாது. இப்போது வெளிவரும் உண்மைகளினால் மீண்டும் குழப்பகரமான சூழல் ஒன்று உருவாகிவிடக் கூடாது என்றார்
No comments
Post a Comment