Latest News

March 11, 2016

லண்டன் மிச்சத்தில் விபத்து தமிழ் பெண் பலி
by admin - 0

லண்டனில் உள்ள மிச்சம் என்னும் இடத்தில் லண்டன் வீதியில் , வைத்து இன்று காலை நடந்த கொடூர விபத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண் பெயர் சுகந்தி என்றும் அவர், 3 பிள்ளைகளின் தாயார் என்றும் 
மேலும் அறியப்படுகிறது

ஜேர்மன் நாட்டில் இருந்து லண்டன் வந்து தனது கணவர் பிள்ளைகளோடு அவர் வாழ்ந்து வந்துள்ளார். மிச்சத்தில் உள்ள டட்லியா என்னும் சூப்பர் மார்கெட்டில் இவர் வேலை செய்து வந்துள்ளார். சுகந்தி அக்கா என்று அனைவராலும் அறியப்படும் இவர் மிகவும் நல்லவர் என்றும். அருமையான நபர் என்றும் பலர் தெரிவித்துள்ளார்கள். 355 இலக்க பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்றபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன




« PREV
NEXT »

No comments