எதிரியும் வியந்து பாராட்டிய தமீழிழ விடுதலைப்புலிகளின்
போர்த்தளபதி பிரிகேடியர் பால்ராஜ்அண்ணா.....!
போர்நிறுத்த ஒப்ந்தம் அமல்படுத்தப்பட்ட சமாதானகாலங்களில் இறுதய அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா சிகிச்சையை முடிந்துக்கொண்டு நாட்டுக்கு திரும்புகிறார்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய பால்ராஜ் அண்ணனையும் உடன் சென்ற போராளியையும் சில சிங்கள இரணுவ சிப்பாய்கள் சூழ்ந்து கொள்கின்றனர் அழைத்துச்சென்று ஒரு தனியறையில் தங்க வைக்கின்றனர்
நடப்பதை சற்றும் எதிர்பாராத பால்ராஜ் அண்ணா இவ்வாறாக
"சிங்களன் தண்ட புத்தியை காட்டிடான்"என்று உடனிருந்த போராளிடம் கூறுகின்றார் நிலைமை கைமீறினால் இயக்க கொள்ளைப்படி எதிரியிடம் எந்த உண்மையும் கூறாது உயிர்துறக்கவும் தயார் நிலையில் பால்ராஜ் அண்ணா
ஒரு மணிநேர காத்திருப்புக்கு பிறகு சில சிங்கள இராணுவ உயர் அதிகரிகள் வந்து பயப்பட வேண்டாம் பால்ராஜ் சமர்களங்களில் சுழன்றடித்து புலிகளுக்கு பல வெற்றிகளை பெற்றுதரும் பால்ராஜ் என்பவர் நீதானா என்று ஒர் இராணுவ உயர்அதிகாரி கூறுகின்றார்
ஆணையிறவில்"வத்திராயன் குடாரப்பு பாக்ஸ்" ((புலிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்தசமர்)) சண்டைபிடித்த பால்ராஜை வாழ்க்கையில் ஒருமுறையேனும் நேரில் சந்திந்துவிட வேண்டுமென்று விரும்பியவர்களில் நாங்கள் சிலர் என்று கூறி அண்ணனை கட்டி தழுவி கைகுலுக்கின்றனர் அதை சிறு புன்முறுவலுடன் பால்ராஜ் அண்ணா ஏற்றுக்கொள்கின்றார்.
புலிகளின் ஒழுக்கமும் வீரமும் நேர்மையும் எதிரிக்கும் பிடிக்கும்
இதில் வியப்படைய ஒன்றுமில்லை"தாயைப்போல பிள்ளை,நூலைப்போல சேலை"
வரலாறுகளை வழிகாட்டிகளாக கொண்ட எங்கள் தங்க தலைவன் வளர்ப்பு அப்படி.........!!!
-பிரபாசெழியன்
No comments
Post a Comment