Latest News

March 18, 2016

மஹிந்த அணி கூட்டத்தில் அமைச்சர் ரிசாட்டின் பிரதிநிதி
by admin - 0

நல்லாட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினர் மாபெரும் ஆட்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தனர்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹிந்த ஆதரவு அரசியல் கட்சிகள் பல கலந்து கொண்டன..

அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக அதன் உயர்பீட உறுப்பினர் முபாரக் மௌலவி அமைச்சர் ரிசாட்டின் பரிந்துரைக்கு அமைய கலந்து கொண்டார்..

இந்த ஆர்ப்பாட்டத்தின் கருப்பொருள் மீண்டும் மஹிந்த ஆட்சியை கொண்டுவருவோம் என்பதாகும்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனா சிங்கள ராவய என பல இனவாத குழுக்களும் கலந்து கொண்டது..

சிறுபான்மை முஸ்லிம் சமூகம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கலந்து கொண்டது..

அ.இ.ம.கா கலந்து கொண்டது அரசியல் அவதானிகளிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

அத்தோடு அமைச்சர் ரிசாட்டின் இரட்டைமுகமும் மஹிந்தவுடனான கள்ள தொடர்பும் இதிலிருந்து அம்பலமாகின்ளது..

அமைச்சர் ரிசாட் மீண்டும் மஹிந்த ஆட்சியை கொண்டுவர அயராது துடிப்பதற்கான காரணம்..

நல்லாட்சி அரசங்கத்தில் அமைச்சர் ரிசாட்டின் பாரிய ஊழல்கள் நிதி மோசடிகள் என்பன அம்பலமாகி கைதாகும் வரை வந்துள்ளது..

எனவே இந்த நல்லாட்சியை கலைத்துவிட்டு மீண்டும் மஹிந்த ஆட்சியை கொண்டுவருவதன் மூலம் தன்மீது உள்ள ஊழல் குற்றாச்சாட்டுக்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என அமைச்சர் ரிசாட் கருதுகின்றார்..

இதற்கான பணிகளையும் கற்சிதமாக செய்துவருகின்றார்..

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அமைச்சர் ரிசாட்டும் திருமண வீடு ஒன்றில் 45 நிமிடங்கள் பூட்டிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடாத்தியதை ஆசாத் சாலி வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments