Latest News

March 06, 2016

முஸ்லிம் தலைமைகளின் சரணாகதி அரசியல் சஹாப்தீன்
by admin - 0

முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் எல்­லோரும் புதிய அர­சியல் யாப்புப் பற்­றிய சிந்­த­னைகள் அற்­ற­வர்­க­ளா­கவே உள்­ளார்கள்.

1987 ஜுலை 29ஆம் திகதி செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை - இந்­திய ஒப்­பந்­தத்தில் முஸ்­லிம்கள் பற்றி எந்­த­வொரு குறிப்­பு­மில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் அபிப்பி­ரா­யங்­களை அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்த்­தன கேட்­க­வில்லை. அவர் தனக்­கி­ருந்த நிறை­வேற்று அதி­கா­ரத்தின் மூலம் தன்­னிச்­சை­யாக முடி­வெ­டுத்து உடன்­ப­டிக்­கையை செய்து கொண்டார். இந்த உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் வடக்கும், கிழக்கும் இணைக்­கப்­பட்­டது.

2002 பெப்­ர­வரி மாதம் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும், தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னுக்கும் இடையே நடை­பெற்ற சமா­தான உடன்­ப­டிக்­கையில் கூட முஸ்­லிம்கள் பற்றி எதுவும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. முஸ்­லிம்கள் ஒரு குழு­வா­கவே சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்­தனர். ரணி­லுடன் பிர­பா­கரன் செய்து கொண்ட உடன்­ப­டிக்கை மூல­மாக புலி­க­ளுக்கு சர்வ­தேச அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­ட­தாக சிங்­கள கடும்­போக்­கா­ளர்கள் குற்றம் சாட்­டி­னார்கள்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-5ஆம் திகதி வரை நோர்­வேயின் ஒஸ்லோ நகரில் அர­சாங்­கத்­திற்கும், விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையே பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன. இதன் போது முஸ்­லிம்கள் தங்­க­ளுக்கும் தனித் தரப்பு தரப்­பட வேண்­டு­மென்று கேட்­டனர். ஆனால், அர­சாங்கம் முஸ்­லிம்­களின் சார்பில் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வார் என்று தெரி­வித்­தது. ரவூப் ஹக்கீம் அர­சாங்­கத்தின் பிர­தி­நி­தி­யா­கவே அந்த பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்டார். இதேவேளை, முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட ஒஸ்லோ பேச்­சு­வார்த்­தையில் முஸ்­லிம்­க­ளுக்கு தனித்­த­ரப்பு தரப்­பட வேண்­டு­மென்று கோரப்­பட்­டது. அக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டது.
. தற்­போது ஜனா­தி­ப­தி­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ள­துடன் பிர­த­ம­ராக ஐ.தே.கவின் தலைவர் ரணில் உள்ளார். இவர்கள் இரு­வரும் இணைந்து அமைத்­துள்ள இந்த ஆட்­சியை நல்­லாட்சி என்­ற­ழைத்­தாலும் , ஒரு கட்­சியை மற்றக் கட்சி வீழ்த்­து­வ­தற்கே திட்­ட­மிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் அதி­கா­ரங்­களை தட்டில் வைத்து இல­கு­வாக கொடுப்­பார்கள் என்று எதிர்­பார்க்க முடி­யாது. புதிய அர­சியல் யாப்பில் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் கவனம் செலுத்­தா­தி­ருப்­பது 2002ஆம் ஆண்டை நினை­வு­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. 2002ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்தின் பங்­காளி வரி­சையில் இருந்த போதும் முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அந்­தஸ்து அன்­றைய அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­ப­ட­வில்லை.

முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை கொடுத்து முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய அந்­தஸ்தைப் பெற்றுக் கொடுக்­காமல் இருப்­பார்­க­ளாயின் முஸ்­லிம்கள் மிகப் பெரிய பின்­ன­டை­வினை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும்.
1987ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட இலங்கை -- இந்­திய உடன்­ப­டிக்கை முஸ்­லிம்­களின் முதுகில் எழு­தப்­பட்ட சாச­ன­மென்று கூறிய முஸ்லிம் காங்­கிரஸ் 2002ஆம் ஆண்டில் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­களின் போது முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய பங்கைப் பெற்றுக் கொள்­ளாமல் அர­சாங்­கத்தின் பக்­கமே ஒட்டிக் கொண்­டி­ருந்­தனர்.

கடந்த அரசாங்கத்தில் முஸ்­லிம்­களின் மீது அடாத்­தாக பல தாக்­கு­தல்கள் நடை­பெற்­றன. முஸ்லிம் கட்­சி­களும், தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அவற்றை தடுத்து நிறுத்­தவோ, அத்­த­கைய செயல்­களில் ஈடு­பட்­ட­வர்­களை கைது செய்து நட­வ­டிக்­கை­களை எடுக்­கவோ அர­சாங்கம் முன்­வ­ர­வில்லை. ஆயினும், முஸ்லிம் கட்­சிகள் யாவும் அர­சாங்­கத்தில் சர­ணா­கதி அர­சி­ய­லையே செய்து கொண்­டி­ருந்­தன. அத்­த­கை­ய­தொரு சர­ணா­கதி அர­சி­ய­லையே இன்றும் முஸ்லிம் கட்­சிகள் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
இன்­றைய நல்­லாட்­சியில் முஸ்­லிம்­களின் காணிகள் மீட்­கப்­ப­ட­வில்லை, முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் பூர­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆயினும், முஸ்லிம் கட்­சிகள் அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக இருக்­கின்­றன. கண்­களை விற்று கண்­ணாடி வாங்கும் சமூ­க­மாக முஸ்­லிம்கள் இருக்க முடி­யாது. முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் அமைச்சர் பதவிப் பசிக்கு முஸ்லிம் சமூகம் இரை­யாக முடி­யாது. அதனை அனு­ம­திக்­கவும் இய­லாது.

ஆதலால், முஸ்லிம் கட்­சி­களும் அவற்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஏனைய கட்­சி­களின் முஸ்லிம் உறுப்­பி­னர்­களும் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­களின் நிலை குறித்­தான முன்­மொ­ழி­வு­களை முன் வைக்க வேண்டும். முஸ்லிம் சமூ­கத்­திற்­கு­ரிய உத்­த­ர­வா­தங்­களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சோம்­பே­றி­க­ளாக இருப்­ப­தனை சகிக்க முடி­யா­துள்­ளது.

சமூகத் தலை­வர்கள் சுறு­சு­றுப்­பாக இருக்க வேண்டும். தேர்தல் காலங்­களில் மூலை­மு­டுக்­கெல்லாம் மாலை­க­ளுடன் ஏழை­களின் குடிசை வரைக்கும் வந்து வாக்­கு­களைப் பெற்றுக் கொண்­ட­வர்கள் தற்­போது கொழும்பில் தரித்­துள்­ளார்கள். கைய­டக்க தொலை­பே­சிகள் முடங்கிக் கிடக்­கின்­றன. கல்­மு­னையில் இயங்­கிய வெளி­நாட்டு வேலை வாய்ப்பு பணி­யகம் அம்­பா­றைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.

இதனை கொண்டு செல்ல விட­மாட்டோம் என்று உரத்த குரலில் பேசிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முதல் அவர் சார்ந்த கட்­சிக்கு மாத்­தி­ர­மில்லை அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸால் கூட அக்­கா­ரி­யா­ல­யத்தை கல்­மு­னையில் நிலை­யாக வைத்­தி­ருக்க முடி­ய­வில்லை என்றால் புதிய அர­சியல் யாப்பில் முஸ்­லிம்­க­ளுக்கு சுய­நிர்­ண­யத்தை எவ்வாறு பெற்றுத் தரு­வார்கள் என்பது கேள்விக் குறியாகவுள்ளது.

வடக்கும், கிழக்கும் இணைந்­தி­ருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ளக் கூடிய அர­சியல் தீர்­வுகள் முன் வைக்­கப்­பட வேண்டும். எங்கள் மக்­களை திருப்­திப்­ப­டுத்­தாத அந்த அர­சியல் தீர்­வினை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றது.

ஆனால், முஸ்லிம் காங்­கி­ரஸோ, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸோ வடக்கும், கிழக்கும் இணைய வேண்­டு­மென்றோ, தனித்­த­னியே இருக்க வேண்­டு­மென்றோ சொல்­ல­வில்லை. முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் புதிய அர­சியல் யாப்பு தொடர்பில் மௌன­மாக இருப்­பதே சிறந்­த­தென்று எண்­ணு­கின்­றார்கள்.

இவ்­வாறு இருந்­ததன் விளை­வினை முஸ்­லிம்கள் அதி­க­மாக பெற்று விட்­டார்கள். அந்த அனு­ப­வத்தை முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் மனதில் கொள்­ளா­தி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.
முஸ்லிம் தலைமைகளின்...
(11ஆம் பக்கம் பார்க்க)
புதிய அர­சியல் யாப்பு பற்­றிய கருத்­தா­டல்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. என்­றாலும், புதிய அர­சியல் யாப்பில் எவ்­வா­றான விட­ய­தா­னங்கள் அமைய வேண்­டு­மென்று ஆளும் தரப்­புக்கும், எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் இடையே இணக்­கப்­பா­டுகள் காணப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால், முஸ்லிம் தலை­வர்­க­ளுடன் அத்­த­கை­ய­தொரு இணக்­கப்­பா­டான பேச்­சுக்கள் நடை­பெ­ற­வில்லை. முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தனித்­த­னியே கட்­சி­களை வைத்துக் கொண்­டாலும் அவர்கள் தேசிய கட்­சி­களின் பிர­தி­நி­திகள் போலவே உள்­ளனர்.

இன்று இலங்­கையின் அர­சியல் விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா, இந்­தியா ஆகிய நாடு­களின் ஆதிக்கம் அதி­க­ரித்துக் காணப்­பட்­டாலும் , இஸ்­ரேலின் செல்­வாக்கும் நாட்டில் உள்­ளது. இலங்­கையின் அர­சியல் பொரு­ளா­தார மாற்­றங்­களில் இந்த நாடு­களின் தலை­யீ­டுகள் இருக்­கவே செய்யும். எனவே, வெளி­நாட்டு சக்­தி­களின் ஆதிக்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மாறு­வ­தற்கும் சாத்­தி­யங்கள் உண்டு.

இதே வேளை, அர­சாங்கம் முஸ்­லிம்­களை தனி­யாக கையா­ளு­வ­தற்­கு­ரிய வகையில் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இதற்­கேற்ற வகையில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் நடந்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் மறந்து சுகபோகங்களில் திளைத்துள்ளார்கள்.

மஹிந்தராஜபக்ஷவின் தேவைக்காக முஸ்லிம் காங்கிரஸ{ம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{ம் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஒரு சின்னத்தில் போட்டியிட முடியுமாயின், தங்களுக்கு முகவரிகளையும், அமைச்சர் பதவிகளையும், பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இருந்த முஸ்லிம் சமூகத்திற்காக ஏன் ஒற்றுமைப்பட முடியாது.

இவர்கள் ஒரு மேசையில் அமர்ந்து கதைக்க முடியாதுள்ளனர். முஸ்லிம் அரசியலில் யார் ஜாம்பவான் என்ற போட்டி மனப்பான்மைதான் ஒற்றுமைப்படுவதற்கு தடையாக உள்ளது. சிங்களத் தலைவர்களையும், மக்களையும் திருப்திப்படுத்துவதற்கு எண்ணும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நடைமுறைகளில் முஸ்லிம் சமூகம் சார்ந்த மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
« PREV
NEXT »

No comments