மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட ஒளி மடுக்கிராமத்திற்கு பொது வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றாக வவுணதீவு ஒளிமடுக்கிராமம் உள்ளது. இங்கு 76 குடும்பங்கள் மட்டும் வசித்து வருகின்றன. இம்மக்கள் பல்வேறு வசதிகளற்ற நிலையிலேயே வசிக்கின்றனர்.
இங்குள்ளவர்கள் குடிநீர் பிரச்சினைகளுக்கே முகம் கொடுத்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு அருகிலிருக் கும் உன்னிச்சைக்குளத்திலிருந்து மட்டக்களப்பு நகர் உட்பட பல கிராமங்களுக்கு குழாய் நீர் மூலம் குடிநீர் வழங்கப் பட்டு வருகின்றது.
ஆனால் ஒளிமடுக்கிராமத்திற்கு நீர் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படாதுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் போதியளவு பொதுக்கிணறுகள் கூட இன்றியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment