முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவாளர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினர் பங்கேற்கும் கூட்டங்கள் இடைநடுவில் கைவிடப்படும் சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாடளாவிய ரீதியில் ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்திற்கு எதிராக கூட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுத்து வருவதோடு பாராளுமன்றத்திலும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் ஆளும்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினர் பங்கேற்கும் கூட்டங்களும் பிரதேச மட்டங்களில் கட்சியின் பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான கூட்டங்களின் போது முன்னாள் ஜனாதிபதியும் தற்போது குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவு தரப்பினர் ஆளும் சுதந்திரக் கட்சியினரால் ஒழுங்கு செய்யப்படும் கூட்டங்களுக்கு தேசிய அரசாங்கத்தின் கீழ் அங்கத்துவம் பெறும் அமைச்சர்களின் வருகைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
திவுலப்பிட்டிய கூட்டம்
கடந்த சனிக்கிழமை திவுலப்பிட்டிய பகுதியில் மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவாளர்களின்கடும் எதிர்ப்பினால் ஆளும் கட்சியின்அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினர் பங்கேற்ற கூட்டம் இடை நடுவில் கைவிடப்பட்டது. இக்கூட்டமானது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெறவிருந்தது. கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் மக்கள் கூக்குரல் எழுப்பி கடும் எதிர்ப்பினை வெளியிட அங்கு பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
சந்திரிகாவின் மெய்ப் பாதுகாப்பாளர்கள் கூட்டம் நடைபெற முன்னதாகவே அங்கு வந்திருந்த நிலையில் கடும் எதிர்ப்புக்கள் காணப்படுவது தொடர்பில் அவருக்கு அறிவித்தமையினையடுத்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூட்டத்தை கைவிட்டார்.
இவ்வாறான நிலையில் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் உட்பட அமைச்சர்களின் கூட்டமானது முன்னெடுக்கப்பட்ட வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சில அமைச்சர்களின் பெயர்களை தெரிவிக்கும்போது காட்டிக்கொடுப்போர் தொடர்பில் கூறும் கதைகளை எமக்கு கேட்க முடியாது என அதற்கும் மக்களினால் கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன. இவ்வாறான கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூட்டமானது கைவிடப்பட்டது.
பெத்தேகம கூட்டம் பெத்தேகம பிரதேசத்தில் பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றின் போது, மஹிந்த அமரவீரவிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
உரையை கேட்குமாறு நிசாந்த முத்துஹெட்டிகம குழுமியிருந்த மக்களிடம் கோரிய போதிலும், அதனை மக்கள் நிராகரித்திருந்தனர்.இதனால் மஹிந்த அமரவீர உரையாற்றாமலேயே மேடையை விட்டு வெளியேற நேரிட்டது.
அமைச்சர் மேடையை விட்டு வெளியேறி வாகனத்தில் ஏறிச் செல்லும் வரையில் கூக்குரல் எழுப்பி சிலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்டி கூட்டம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த ஆகியோர் நேற்று முன்தினம் கண்டியில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டங்களிலும் மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அமைச்சருக்கு கூக்குரல் எழுப்பி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இவ்வாறு கிராம மட்டங்கள் உட்பட பிரதேச மட்டங்களின் கூட்டங்களின் போது ஆளும் கட்சியின் அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த ஆதரவு தரப்பினர் கடும்எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆளும்கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினர் பங்கேற்கும் கூட்டங்களின் போது திட்டமிட்ட வகையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றதா என ஆளும் கட்சியினை சேர்ந்த வர்கள் சந்தேகம் வெளியிட்டுள் ளனர்.
பொது எதிரணியினரின் நிலைப்பாடு நல்லாட்சியினை ஸ்தாபிப்பதாக கோரி மக்களை ஏமாற்றி ஆட்சி பீடத்தை கைப்பற்றிய இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளில் இன்று அனைத்து மக்களும் அதிருப்தியடைந்துள்ளதோடு அரசின் உண்மை நிலையினை புரிந்து கொண்டதன் விளைவாகவே மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கின்றனர். இந்த அரசாங்க த்தின் தொடர்ச்சியான நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என பொது எதிரணியினை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments
Post a Comment