Latest News

March 31, 2016

புலிகள் மீண்டும் தலைதூக்கினால் எதிர்கொள்ளத் தயார்: அரசாங்கம் சூளுரை!
by admin - 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கினால் அதனை எதிர்கொள்வதற்கு இலங்கைப் பொலிஸாரும் பாதுகாப்பு அமைச்சும்  தயாராகவே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சூளுரைத்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சாவகச்சேரி சம்பவத்தில் பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்வதற்கான ஊக்கமளிப்பு பிரச்சினையல்ல, மாறாக இது ஒரு தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினையாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பதை முன்னிலைப்படுத்தி நாட்டில் சிலர் சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். எவ்வாறாயினும் அவ்வாறு தலைதூக்கினாலும் அதனை மேற்கொள்வதற்கும், எதிர்கொள்வதற்கும் இலங்கை பொலிஸாரும், பாதுகாப்பு அமைச்சும் தயாராகவே உள்ளன என்றார்.

« PREV
NEXT »

No comments