Latest News

March 31, 2016

சதாமை அழிப்பதற்கு வேற்று கிரக வாசிகள் காரணமா? அதிர்ச்சி தகவல்
by admin - 0




'தெரிந்தது கையளவு, தெரியாதது உலகளவு' என்பார்கள். இது 200 சதவீதம் உண்மை என்பதை இந்த தொகுப்பை படித்து முடித்தவுடன் தெரிந்து கொள்வீர்கள். உலகளவில் விசித்திரம் மற்றும் ரகசியம் நிறைந்த பல்வேறு பகுதிகளை பற்றி அறிந்திருப்பீர்கள், ஆனால் ஏலியன்கள் வந்து செல்வதாக கூறப்படும் யுஎஃப்ஒ தளம் குறித்து அறிவீர்களா? உடனே ஏரியா 51 தானே தெரியும்.! என்பவர்களுக்கு வாழ்த்துக்கள். உலகில் ஏரியா 51 தவிற பல்வேறு யுஎஃப்ஒ தளங்கள் இருக்கின்றது என்பதை தெரிவித்து கொண்டு, இவை குறித்த விரிவான தகவல்களை ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்.

சான் லூயிஸ்,

கொலராடோ காலம் காலமாக பல்வேறு அறிக்கைகளின் மூலம் சான் லூயிஸ் பிரபலமான யுஎஃப்ஒ தளமாக அறியப்படுகின்றது. இங்கு அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளை தவிற நிழல் மனிதர்களின் நடமாட்டம் இருந்து வருகின்றது என்றும் கூறப்படுகின்றது.


வென்சிலாஸ் மைன், போலாந்து

விபத்தில் சிக்கிய யுஎஃப்ஒ ஒன்றை இரண்டாம் உலக போரின் போது நாஸி படையினர் கண்டுபிடித்து வென்சிலாஸ் மைன் பகுதியில் ஏலியன் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து வருவதாக சதி கோட்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டுல்ஸ் பேஸ், நியூ மெக்சிக்கோ

சுமார் 3000 பேர் வசிக்கும் சிறிய நகரம் தான் டுல்ஸ். இப்பகுதி நியூ மெக்சிக்கோ மற்றும் கொலாரடோவின் எல்லையில் அமைந்திருக்கின்றது.



ரெப்டிலியன்ஸ்

இப்பகுதியில் ரெப்டிலியன்ஸ் வகை ஏலியன்கள் வசிப்பதாகவும், இங்கு வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.

கிரே ஏலியன்

மேலும் கிரே ஏலியன்கள் தான் இந்த தளத்தை இயக்கி வருகின்றது என்ற கருத்தும் நிலவுகின்றது. இதோடு இவை அனைத்தும் உண்மை என பல்வேறு சதி கோட்பாட்டாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பெர்ம் அனோமலஸ் சோன்,

ரஷ்யா 1989 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட 70 சதுர கிலோமீட்டர் பரப்பலவில் யுரல் மலைப்பகுதியில் பெர்ம் அனோமலஸ் அமைந்திருக்கின்றது.



எம்-டிரையாங்கிள்

இப்பகுதியானது எம்-டிரையாங்கிள் என்றும் அழைக்கப்படுகின்றது. இப்பகுதியில் அவ்வப்போது யுஎஃப்ஒ'க்கள் வந்து செல்வதாகவும், இங்கு உடல் வெளிப்பாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.



நிழல் உருவங்கள்

வினோதமான வெளிச்சங்கள், நிழல் உருவங்கள், அறியப்படாத சக்திகள், வானத்தில் வினோதமான சின்னங்களின் பிம்பங்கள் போன்றவை காணப்படுவதாகவும் அறியப்படுகின்றது. இருந்தும் எம்-டிரையாங்கிள் குறித்த மர்மம் தொடர்ந்து நீடிக்கின்றது.



என்வி அன்டு டோனோபா,

ஏஇசட் ஏரியா 51 பகுதியில் இருந்து 70 மைல் தூரத்தில் வடமேற்கு திசையில் அமைந்திருக்கும் பகுதி தான் டோனோபா. இந்த பகுதி மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு தடை செய்யப்பட்ட ஒன்றாக இருக்கின்றது.

யுஎஃப்ஒ

அரிசோனாவின் டோனோபாவில் அனைத்து வித வடிவம் கொண்ட யுஎஃப்ஒ'க்கள் வந்து செல்வது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவை போர் விமானங்களின் பாதுகாப்போடு வந்து செல்லும் என்றும் கூறப்படுகின்றது. இவை அபாயகரமான 3.3 ஜிகாவாட்ஸ் மினசக்தியை உருவாக்கும் என்றும் கூறப்படுகின்றது.



எஸ்4 ஃபேசிலிட்டி,

நெவேடா ஏரியா 51 பகுதியில் இருந்து சுமார் 20 மைல் தூரத்தில் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் எஸ்4 ஃபேசிலிட்டி மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

கிரே ஏலியன்

இப்பகுதியானது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப விசேஷமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனுள் ஆய்வாளர்கள் மற்றும் கிரே ஏலியன்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.



இந்தியா சீனா எல்லை பகுதியில் இருக்கும் தரிசு பகுதியான இது ஏலியன் தளமாக கருதப்படுகின்றது. இப்பகுதியில் இருப்பவர்கள் அவ்வப்போது இங்கு வினோத நிகழ்வுகள் அரங்கேறுவதாக தெரிவிக்கின்றனர்.



மேலும் இப்பகுதியில் முக்கோண வடிவில் சத்தமில்லாத விமானங்கள் அவ்வப்போது புறப்படுவதாகவும், திடீரென அவை மறைந்து விடுவதாகவும் கூறப்படுகின்றது.



கபுட்சின் யார் ரஷ்யாவின் ரோஸ்வெல் என அழைக்கப்படும் இது ஒரு ரகசிய ஆய்வு மையம் ஆகும். பல ஆண்டுகளாக இங்கு பல்வேறு வினோத நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக கூறப்படுகின்றது

சமீபத்தில் ஒரு யுஎஃப்ஒ சுமார் இரண்டு மணி நேரம் அதிக பிரகாசமான வெளிச்சத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதாம் ஹூசைன் 

2001 ஆம் ஆண்டு ஈராக் பகுதியில் உடைந்த நிலையில் யுஎஃப்ஒ கண்டெடுக்கப்பட்டதாகவும் அதன் பின் தான் ஏரியா 51 சார்ந்த ஆர்வம் சதாம் ஹூசைனிற்கு ஏற்ப்பட்டதாகவும் சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதாம்ஸ் ஏரியா 51 

சதாம் ஹூசைன் ஏலியன்களோடு தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர் ஏலியன் தொழில்நுட்பங்களை அவர்களிடம் இருந்து பறிக்க முயன்றதாக உலகெங்கும் இருக்கும் சதி கோட்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.இதனால் சதாமை அழிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது 




« PREV
NEXT »

No comments