சாவகச்சேரி மறவன்புலவு வீடு ஒன்றில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் என்பவை மீட்டதாகக் கூறப்படும் சம்பவமானது தமிழர்கள் மீது வீண் பழியைப் போட்டு புலிகள் மீண்டு எழுகின்றனர் என்ற இனவெறிச்செயல் தமிழ் மக்களை துன்புறுத்துவதற்கான நாடகமாகத் தான் இதனைப் பார்க்க முடியும் என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய இனத்தின் தந்தையின் அமரர் மூதறிஞர் சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் 118 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் இன்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கு முன்பாக உள்ள அன்னாரின் நினைவு தூவிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி மறவன்புலவு வீடு ஒன்றில் தற்கொலை அங்கி ,மற்றும் வெடிபொருட்கள் என்பன மீட்டதாக கூறப்பட்ட விடயத்திலே அரசாங்கத்திற்குள் சதி செய்து கொண்டிருப்பவர்கள் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனவும் நினைக்க முடிகிறது என்றார்.
No comments
Post a Comment