பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்: தெரேசா மே
பிரஸ்ஸல்ஸில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டுத்தாக்குதல்களை அடுத்து மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என பிரித்தானிய உள்துறை செயலர் தெரேசா மே கேட்டுக்கொண்டுள்ளார்.ஹவுஸ் ஒப் கொமன்ஸ்சில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவிக்கையிலேயே தெரேசா மே இவ்வாறு குறிப்பிட்டார்.
பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று காலையில் இருஇடங்களில் வெடித்த குண்டுகளால் 34 பேர் உயிரிழந்தும் 100 க்கும் அதிகமானோர் காயமடைந்தும் உள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானியாவின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிசார் மோப்பநாய்கள் சகிதமாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பிரித்தானியப் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அவதானமாக இருக்கவேண்டும் எனவும் அதேவேளை பிரஸ்ஸல்ஸுக்கு அத்தியாவசிய தேவையில்லாமல் பயணம் மேற்கொள்ளவேண்டாம் எனவும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
No comments
Post a Comment